Monday, 18 June 2018

About Simma Raasi

மகம்(கேது)பூரம்(சுக்ரன் )உத்திரம்(சூரியன்) நட்சத்திரங்களை கொண்ட ராசி
,,,ஆண் ராசி,,
 ஸ்திர ராசி,
, ஒற்றை படை ராசி,
, நெருப்பு ராசி,
,முழுக்க முழுக்க ஆண்மகன்,,, எல்லார்க்கும் உடம்பின் வலது புறம் ஆண் சிவன் இடது புறம் பெண் தேவிசக்தி அர்த்த நாரீஸ்வரன் அமைப்பில் பெண்பால் ஆண்பால் குணம் அமைந்து இருக்கும் ஆனால் இவர்களில் ஆணுக்கு சிவன் ஆக்கிரமிப்பு அதிகம் பெண்ணுக்கு சக்தி ஆக்கிரமிப்பு அதிகம் அதாவது ஹார்மோன்ஸ் balance இந்த ராசி ஆண்களலின் தோற்றம் இவன் தான்டா ஆம்பள பெண்களின் தோற்றம் இவள்தான்டா பெண் என்று மற்றவர் வாய்விட்டு சொல்லும்படியாக அமையும்,,, ஆனால் குணத்தில் பெண்களும் ஆண்கள் போல செயல்பாடுகள் இருக்கும்,,
தைரியம் நிறைந்தவள் யாருக்கும் அஞ்சமாட்டார்கள் ,,இந்த ராசிகாரர்களுக்கு மற்றவர்கள் மனது அளவில் மரியாதை கொடுப்பதில்லை ஆனால் 100%பயத்தினால் மட்டும் மரியாதை தானா தேடி வரும்,, வந்துரும்
,,ஐயையோ sir வந்துட்டாரு madam வந்துட்டாங்க என்று பயம் எப்பொழுதும் மற்றவர்க்கு இருக்கும் அந்த அளவிற்கு இவர்களின் ஆளுமை திறன் கனகச்சிதமாக இருக்கும் காட்டிற்கு ராஜா சிங்கம் அல்லவா,, வீட்டிலும் இவர்கள் கொடிதான பறக்கும் வேலை பார்க்கும் இடங்கிலும் இவர்கள் ராஜ்ஜியம் தான் இந்த ராசிக் காரர்களுக்கு சூரியன் நீசம் ஆனால் மேல் சொன்ன தோற்றம் மாறுபடும்,
, படிப்பில் ஆர்வம்,, செலுத்துவர்கள் பள்ளி வாத்தியாரை பாடத்தில் சந்தேகம் கேட்டு வாத்தியாரை கோபமாக்கிவிடுவர்கள்
 சிம்ம குழந்தைகள்,, சூரியனுக்கு நெருங்கிய கிரகம் புதன் ,,சுக்ரன்,, என்பதால் படிப்பிலும்,, அழகு அறிவிலும் பெருமை கிடைக்கும்,,

நானே ராஜா நானே மந்திரி நீ எந்திரி ,,,,என்ற அளவுக்கு சின்ன கடையோ,, ஹோட்டலோ,, பொறியியல் துறையிலோ ,வெளிநாட்டு வேலையிலோ, மருந்து தொழிலிலோ,, காவல் துறையிலோ,, அரசியலிலோ இவர்க்கு எந்த துறை போய் வேலை பார்த்தாலும மற்றவர்கலை ஓரம் கட்டுவார்கள் இவர்கள் கீழ்தான் மற்றவர்கள் வேலை செய்வார்கள் வேகமாக முன்னேற்றம் இருக்கும் மற்றவரை போல காலை வாரி மேல்நிலை வர மாட்டார்கள் இவர்களின் முயற்சியால் பதவி உயர்வு தேடிவரும்,

, இதுல அப்படி ஒண்ணும் முன்னேற்றம் இல்லை என்று சொல்பவர்கள் ஜாதகத்தில் சனி குத்தாட்டம் இருக்கும் ,,சனி10இல் அமர்ந்து பிரச்சனை கொடுத்துகிட்டே இருப்பார்,,, ஜாதக கட்டம் ஒரு அரசு சபை அதில் சிம்மராசிதான் ராஜா,,, சூரியன் தான் சுயஜாதகத்தில் கூட தந்தையை குறிக்கும் ,,தலைவன்,,அப்பேர்ப்பட்ட தலைவன்க்கு எங்கு சென்றாலும் மதிப்பு மரியாதை கண்டிப்பாக இருக்கும் சுய கௌரத்திற்க்காக போராடுபவர்கள்,,

கடக ராசி ராணி
மிதுனம் கன்னி புலவர்கள்
,, சுக்ரன் துலாம் கஜானா ,,பொருளாதாரம்,,
மேஷம் விருச்சிகம் தளபதி கள்,
, மகரம்,, தனுசு கட்டப்பஞ்சாயத்து தவறு செய்பவர்களை இழுத்து வருபவர்கள்,
, கும்பம் மீனம் அரண்மனை வாயில்காவலர்கள்,
, என்று நமது ஜாதக கட்டத்தில் கூட சூரியனை மிகைபடுத்தி தான் குறிப்பிட்டு உள்ளனர் நமது முன்னோர்கள், இவர்கள் வாழ்க்கையில் அடிசருக்குவது திருமணம் வாழ்க்கையில் தான்,, இவர்களுக்கு திருமணம் வாழ்க்கை சுருங்கித்தான் அமைகிறது,
, சிலருக்கு மட்டும் விவாகரத்து,,இந்த ராசிகாரர்கள் காதல் செய்ய நேரமில்லாதவர்கள் காதல் செய்வது அரிது சுய ஜாதகத்தில் சுக்ரன் உச்சம் பெற்று இருப்பவர்கள் புதன் நிலை பொறுத்து மட்டுமே காதல் கல்யாணம் செய்கிறார்கள்,, இது அறம் நோக்கி பயணம் செய்யும் ராசி காதல் அவ்வளவாக பிடிப்பதில்லை ரொம்ப இயல்பான குணம் நல்ல கண்ட்ரோலர்,, எல்லா பொறுப்பும் இவர்கள் கையில் இருக்கும் tv remote கூட இவர் கையில்தான் இருக்கும்,,

 இவர் வச்ச சேனல் தான் நாமா பாக்கணும்,, எல்லா விஷயத்தில்ம் தலைவன்,,சுய ஜாதக செவ்வாய் இருக்குமிடம் பொறுத்து சாந்தமாகவும்,, கொடூர கோபம் கொண்டவராகவும் நடந்து கொள்வார்கள்,,
 ராசிக்கு5ஆம் இடம் குரு வீடு தனுசு ஆதலால் பிள்ளை பேருக்கு கவலை இல்லை ,,
ஆண் குழந்தை அதிகம் பிறக்கும்,, ஒரு சிலருக்கு மட்டும் தாமதம் ஆகிறது (சுய ஜாதக)இவர்களுக்கு திருமணம் தாமதமோ,, பிள்ளை தாமதமோ,,வேலை தாமதமோ,,படிப்பு தடையோ,, பதவி உயர்வு தடையோ,, பணம் இழுபரியோ,, தொழில் வளர்ச்சி இன்மையோ எது இருந்தாலும் தஞ்சை மாவட்டம் சூரியனார் கோவில அடிக்கடி சென்று வர நிச்சயம் மாற்றம் உண்டு,

, திருமணம் ஆகி பிரச்சினை யா இருக்கு ,,ஜாதகம் பொருத்தம் இல்லாமல் கல்யாணம் பண்ணிட்டோம், கஷ்டமா இருக்கு,,என்று சொல்பர்கள் அடிக்கடி சூரியனார் கோவில் போய் வாங்க தாக்கம் குறையும் மாற்றம் உண்டு யாருக்கு மந்திரம் ஸ்தோத்திரம் தெரியுதோ இல்லையோ இவர்களுக்கு

ஆதித்யா ஸ்தோத்திரம் தெரிந்து வைத்திருக்க வேண்டும செய்யவேண்டியவை செய்யாமல் இருப்பதால் தான் சருக்குகின்றன ர்,,,,முக்கியமா சிம்ம ராசி காரங்க எவ்ளோ வசதி இருந்தாலும் சூரியனார் கோவிலில் திருமணம் முடிக்கனும் முடித்தால் நல்லது இது அந்த கோவிலில் முடித்த ஜோடிகளின் வாக்கு 77வயது பெண்மணி ,,84வயது ஆண் பேரன் பேத்தி வீடு,, வசதி,, என்று ராஜமரியாதையுடன் வாழ்கிறார்கள,இதுபோல ரொம்ப ஜோடி ,,,இருக்கு இந்தியாவிலேயெ உருவ சூரிய வழிபாடு இங்கு தான் இருக்கு பயன்படுத்தி கொள்ளவும்,,

,,,யாராக இருந்தாலும் சிம்மம் ராசியில் இருக்கும் உத்திரம் நட்சத்திர அன்று விரதம் இருந்து சூரியனை வழிபட ஆண்மை அதிகரிக்கும்

,, ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் மருந்துகள் எடுக்க தொடங்கும் நாள் உத்திரம் நட்சத்திர நாளாக இருக்கவேண்டும் அதிவிரைவில் ஆண்மை பலப்படும் காரணம் உத்திரம் நட்சத்திர அதிபர் சூரியன் அதி தேவதையும் சூரியன் ,,,

சூரியன் சிவன் ஆண் கிரகம்,,சிம்ம ராசியில் அதிக விஷயங்கள் இருக்கு,, இதுவரை கஷ்டம் பட்ட சிம்மராசி கரகர்கள் போனது போகட்டும்,, இனி வரும் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கணும் எந்த தடையும் இருக்க கூடாது அந்த கிரகம் பார்க்கு இந்த கிரகம் பார்க்கு எதுவுமே நல்லது நடக்க மாட்டிக்குது திருமணம் வாழ்க்கையும் சரியா அமையல படிச்ச படிப்புக்கு சம்பளம் இல்லை என்று புலம்பாமல் இருக்க வேண்டும் என்றால் சிம்மரசியில் பிறந்தவர்கள் (22வயது முதல் நாம் எடுத்த பிறவியின் கர்மவினை ஆரம்பிக்கும் இதை கவனிக்கனும் 22வயசு வரை கல்லூரி, பள்ளி என்று அம்மா அப்பா தயவில் எதை பற்றுயும் கவலை இல்லாமல் ஓடும் 22வயது அப்புறம் தான் நாம் எடுத்த பிறவி கர்மா வேலை செய்யும் பிரச்னை தொடங்கும் இது எல்லா ராசியினர்ருக்கும் தான்)அதனால் கண்ணுக்கு பளிச்ன்னு தெரியுற கிரகம் சூரியன் சூரிய பகவானை காலை வரவேற்கனும் மாலை வழியனுப்பனும்,, சூரிய நமஸ்கரம்,, சிம்மரசி க்கு சூரியனே கடவுள்,, மற்ற கிரகத்தை பார்க்க முடியுமா, குரு,, சுக்ரன்,, சனி,, புதன் ,,செவ்வாய், rocket ல போய்த்தான் பாக்கணும்,,
 கண்ணுக்கு தெரியர கிரகம் சூரியன்,, சூரியனே சிம்மதுக்கு கடவுள்,, 22வயதில் இருந்து தினமும்5மணி எழுந்து சூரியனை வழிபட ஆன்மா பலம் கூடும் கர்மா பலம் குறையும் உண்மை வாழ்க்கை பஞ்சர் ஆகாம பயணிக்கலாம் ,,,,

 ஜாதகம் இல்லாதவர்கள் சூரியனார் கோவிலில் திருமணம் முடிக்க மாங்கல்ய பொருத்தம் உண்டாகும்,, களதிர ஸ்தானம் 7இல் சூரியன் இருந்தால் சூர்ய தோசம் இவர்களும் சூரியனார் கோவிலில் திருமணம் முடிக்கலாம்,,உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களில்ஆண்களை விட பெண்களுக்கு த்தான் வீட்டில் அதிக பொறுப்புகள் இருக்கும்,,

மகம் பூரத்தை விட உத்தரம் பெண்களுக்கு திருமணம் பிரச்சினை ஏற்படுவது இல்லை,,உத்திரம் அதிதேவதை சூரியனாக இருப்பதால் அவ்வளவாக பாதிப்பு இல்லை,, மகம் நட்சத்திர தேவதை சுக்ரன் பூரம் பார்வதி அதிதேவதை இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவர்களை மாதம் ஒரு நாள் நட்சத்திர தினத்தில் விரதம் இருந்து வழிபடலாம்,,

மகம் நட்சத்திர நாளில் எந்த ராசி காரர்களுக்கும் ,பாம்பு,, கடிததால் உயிர் பிழைக்க மாட்டார்கள்,

 சிங்கம்  கர்ஜித்தால் தான் மற்ற விலங்குகள் அஞ்சும் அதுபோல பேச வேண்டிய இடத்தில் பேசினால் தான் மனமார மரியாதை கிடைக்கும்,, சிம்மரசி சிம்ம  லக்னத்துக்கு சனி தசை சனி புக்தி காலங்களில் பிரச்சினை தலைக்கு மேலே இருக்கும் இவர்களுக்கு ரோகஸ்தானம்6இல் சனி அமர்ந்து விட்டால்  உடல்நலம் பாதிக்க படுவர்கள்,, இந்த காலங்களில்,, வேஷம் போட்டே ஆகணும் கோவில் கோவிலாக போகணும் ஊனமுற்றவர்களை தேடி பிடித்து உதவி செய்ய இவர்கள் தப்பிக்கலாம்,,,சிங்கம்,, சிவன்,,சூரியன்,, ஆண்,,நெருப்பு,, இப்படிப்பட்ட வாழ்க்கை ரகசியம் அடங்கியவர்களை சிங்கமாக ராஜாவாக ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை

JOTHIDAM KARPOM VANGA